ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
ஒரு காலத்தில் இசையும், தமிழும் செழித்து வளர்ந்த இடம் யாழ்ப்பாணம். பல ஆண்டுகளாக அங்கு நடந்த உள்நாட்டு போரால் எப்போதும் துப்பாக்கி சத்தமும், குண்டு மழையும், ரத்த ஆறும் ஓடியது. போர் முடிவுக்கு வந்து தற்போது அமைதி திரும்பி இருக்கும் நேரத்தில் அங்கு சென்று முதன் முறையாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார், தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
'சவுண்ட்ஸ் ஆப் தி சவுத்' என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை காண எந்த வித கட்டணமும் இல்லை. அதோடு முற்றவெளி மைதானம் என்ற இடத்தில் திறந்தவெளியில் நடக்கிறது இந்த இசை நிகழ்ச்சி. வருகிற 30ம் தேதி மாலை 4 மணி முதல் நடக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் “யுத்தத்தின் மூலமும், சமீபகாலமாக பொருளாதாரக் கொந்தளிப்பின் ஊடாகவும் பயணப்படும் அங்குள்ள தமிழ் சமூகத்திற்கு தைரியத்தையும், உறுதியையும் வழங்க வேண்டும் என்ற சந்தோஷின் நீண்டகால ஆசை இப்போது இந்த இசை நிகழ்ச்சி மூலம் நிறைவேற உள்ளது.
யாழ்ப்பாண மக்களுக்கு 'சவுண்ட்ஸ் ஆப் தி சவுத்' இலவச இசை நிகழ்வாக இருக்கும். பிற வழக்கமான இசை நிகழ்ச்சிகளைப் போல அல்லாமல், 'சவுண்ட்ஸ் ஆப் தி சவுத்' பல்வேறு தெற்காசிய கலாச்சாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இசைக் கலவை, பிரபலமான பின்னணி பாடகர்கள் முதல் அற்புதமான சுயாதீன கலைஞர்கள் வரை பல்வேறு வகைகளையும், இசைக்கலைஞர்களையும் இந்த நிகழ்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. சந்தோஷ் நாராயணனனே இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பதால் இந்த இசை மொழி, கலாச்சாரம் போன்ற எந்தவிதமான தடையும் இல்லாமல் அனைத்து வகையான பார்வையாளர்களிடமும் சென்றடையும் என்பது நிச்சயம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.