லக்கி பாஸ்கர் இயக்குனருடன் சூர்யா கூட்டணி | அல்லு அர்ஜுன் விவகாரம் : களமிறங்கிய தில் ராஜு | பிளாஷ்பேக் : அப்பா சிவகுமார் அடிவாங்குவதை பார்த்து கதறி துடித்த கார்த்தி | ஜனவரி 27 முதல் சுற்றுப்பயணத்தை துவங்கும் விஜய்! - நடிகர் தாடி பாலாஜி வெளியிட்ட தகவல் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த 'ஸ்பூப்' கதை | பாலிவுட் பாடகர் முகமது ரபியின் வாழ்க்கை சினிமா ஆகிறது | அப்பாவாக போகும் ரெடின் கிங்ஸ்லி! | தமிழ் தயாரிப்பாளர்கள் கன்னட சினிமாவுக்கு வர வேண்டும் : கிச்சா சுதீப் அழைப்பு | தெறி படத்தை விட வசூலில் பின்தங்கிய பேபி ஜான்! | வாரணாசியில் சாய் பல்லவி சாமி தரிசனம் |
உலக புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ படமான 'கேப்டன் அமெரிக்கா' மூலம் பிரபலமானவர் கிறிஸ் இவான்ஸ். அமெரிக்க நாட்டின் அடையாளமாக அங்குள்ள குழந்தைகள் இவரை பார்த்தனர். வெளியில் எங்கு சென்றாலும் அவரது இயற்பெயர் மறைந்து கேப்டன் அமெரிக்காவாக கொண்டாடப்பட்டார்.
42 வயதான கிறிஸ் இவான்ஸ், தன்னை விட 16 வயது இளையவரான போர்ச்சுக்கீசிய நடிகை ஆல்பா பாப்டிஸ்டாவை காதலித்து வந்தார். குழந்தைகளிடையே தனக்கு இருக்கும் இமேஜின் காரணமாக காதலை மறைத்து வந்தார். தற்போது திருமணத்தையும் ரகசியமாக செய்திருக்கிறார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் தவிர்த்து மார்வெல் நடிகர்கள் ராபர்ட் டவுனி, கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜான் ராசிங்க்சி, எமிலி பிளண்ட், ஜெர்மி ரன்னர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த திருமணம் பற்றிய தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளது. ரசிகர்கள் இருவரையும் வாழ்த்தி வருகிறார்கள்.