AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வரும் தீபாவளிக்கு படம் வெளியீடு என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இன்று படத்தின் டீசரை நான்கு மொழிகளில் வெளியிட்டனர். தமிழில் தனுஷ், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர். வழக்கமான டீசரை தாண்டி வித்தியாசமாக அமைந்துள்ள இந்த டீசருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' அமைந்துள்ளது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வழங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மிகப்பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி," என்றார்.
விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமான 'ஜிகதண்டா டபுள் எக்ஸ்' பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.