திருமணம், விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலில் மொத்த கிளாமரையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கிறங்கடித்தார் சமந்தா. அதன் பிறகு அவர் கதையின் நாயகியாக நடித்த இரண்டு படங்கள் அதிர்ச்சி தோல்வியாக அமைந்த நிலையில், விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து அவர் நடித்து செப்டம்பர் ஒன்றாம் தேதி திரைக்கு வந்த குஷி படம் வெற்றி பெற்றது. தற்போது நடிப்புக்கு பிரேக் கொடுத்திருக்கிறார். இந்த நேரத்தில் அடுத்தபடியாக சமந்தா ஆந்திர அரசியலில் என்ட்ரி கொடுக்கப் போவதாகவும், ஒரு பிரபல கட்சியில் அவர் இணையப் போவதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது சமந்தா சொல்லும் போது தான் தெரியவரும். ஏற்கனவே விஜயசாந்தி, ரோஜா, குஷ்பூ, நமீதா உள்ளிட்ட பல நடிகைகள் அரசியலில் உள்ள நிலையில், சமந்தாவும் அந்த பட்டியலில் இடம் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.