பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார் . 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கதாநாயகியாக நடிக்க நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் அதிதி ஷங்கருக்கு பதிலாகவா அல்லது மற்றொரு கதாநாயகியாகவா நடிக்கவுள்ளார் என்பது குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை.
தமிழில் ‛நேரம், ராஜா ராணி' போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்த பின் சினிமாவை விட்டு ஒதுங்கினார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் தற்போது நஸ்ரியா நடித்து வருகிறார். இந்தபடம் உறுதியாகும் பட்சத்தில் தமிழில் இவரின் ரீ-என்ட்ரி படமாக இது அமையும்.