ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு என்கிற பிருத்விராஜ் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்தார். தற்போது பப்லுவுக்கு 57 வயதாகிறது. ஆனாலும் வொர்க்-அவுட், பாசிட்டிவான மனநிலை என உடலளவிலும், மனதளவிலும் கட்டுமஸ்த்தாக இளமையுடன் இருக்கிறார். இவருக்கு மலேசியாவை சேர்ந்த 24 வயதே ஆன ஷீத்தல் என்பவருடன் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இவர்களது உறவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், சோஷியல் மீடியா பதிவுகளிலும், நேர்காணல்களிலும் தனக்கும் ஷீத்தலுக்குமான உறவு எத்தகையது என்பதை பப்லு விளக்கிவிட்டார். தற்போது ஷீத்தலுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் பப்லு அவருடன் சேர்ந்து ரொமான்ட்டிக்காக நடனமாடி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‛காவாலா' பாடலுக்கு இருவரும் நடனம் ஆடி உள்ளனர்.




