பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாக்கூர் |

2023ம் ஆண்டின் கடைசி சில மாதங்களில் நுழைய உள்ளோம். கடந்த எட்டு மாதங்களில் 140க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இன்னும் உள்ள நான்கு மாதங்களில் எப்படியும் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகலாம்.
வரும் செப்டம்பர் 1ம் தேதி “ரங்கோலி, பரம்பொருள், லக்கி மேன், கிக், கருமேகங்கள் கலைகின்றன” ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவற்றுடன் 'குஷி' டப்பிங் படமும் வெளியாகிறது. விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்' படமும் 1ம் தேதி வெளியாவதாக இருந்தது. தற்போது படத்தை செப்டம்பர் 8ம் தேதிக்குத் தள்ளி வைத்துவிட்டார்கள்.
செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் வரை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும், அக்டோபர் மாதம் விஜயதசமியை முன்னிட்டும், நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டும், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சில பல முக்கிய படங்கள் வெளியாக உள்ளன.
2023ம் ஆண்டில் இதுவரை வெளியான 140க்கும் மேற்பட்ட படங்களில் “வாரிசு, துணிவு, டாடா, வாத்தி, அயோத்தி, பத்து தல, விடுதலை, பொன்னியின் செல்வன் 2, குட் நைட், போர் தொழில், மாமன்னன், மாவீரன், டிடி ரிட்டர்ன்ஸ், ஜெயிலர்” ஆகிய 14 படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. வரும் மாதங்களில் சில முக்கிய படங்கள் வருவதால் வசூல் ரீதியான வெற்றிப் படங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.




