கமல்ஹாசன் பெயரில் மோசடி : தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை | உதயநிதிக்கு பதில் அளிக்க 'ஏஞ்சல்' பட தயாரிப்பாளருக்கு கோர்ட் உத்தரவு | பிளாஷ்பேக் : 24 வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு தாய் பற்றி பேசிய படம் | கல்லுரிகளில் சினிமா விழாக்களுக்குத் தடை வருமா? | சிறிய விபத்தில் சிக்கி, ஓய்வில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா | வேட்டையன் - 'மனசிலாயோ' பாடல் வெளியானது | 10 ஆண்டுகளுக்குப் பிறகான பிரிவுகள்… - அதிர்ச்சியடையும் ரசிகர்கள் | 'மெய்யழகன்' குழுவினரின் தமிழ்ப் பற்று | தமிழகத்தில் 100 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' ? | ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நாயகனாகும் சந்தீப் கிஷன் |
தனியிசைக் கலைஞராக ராப் பாடல்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மையோடு தமிழ் சினிமாவில் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார்.
கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் 'இசைத் தொழில் முனைவோர்' (Musical Entrepreneurship) என்பதை மையமாக வைத்து ஆதி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். பல புதிய தனியிசைக் கலைஞர்களை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தி வரும் இவருக்கு, தனது ஆராய்ச்சி இசையை வாழ்க்கையாக கொண்டோருக்கு உதவும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்ததை அடுத்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் ஹிப்ஹாப் ஆதிக்கு, கவர்னர் ஆர்.என். ரவி முனைவர் பட்டத்தை வழங்கினார். இசைத் தொழில் முனைவோர் என்ற ஆராய்ச்சிப் பிரிவில் ஒருவர் டாக்டர் பட்டம் பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய ஆதி, “இசையில் தொழில்முனைவு பிரிவில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்து, கடந்த ஆண்டு ஆய்வை நிறைவு செய்தேன். அந்த வகையில் பட்டமளிப்பு விழாவில் அதற்கான பட்டத்தை பெற்றுக் கொண்டேன். வேறு பணிகளை செய்து கொண்டே ஆய்வு செய்தது சற்று கடினமாக இருந்தது. அடுத்ததாக பி.டி. சார் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும் என்று நினைக்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.