தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

சமீபகாலமாக தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நம் தமிழ் ஹீரோக்கள் நடித்து, தெலுங்கில் இன்னும் வலுவாக காலூன்ற விரும்பும் போக்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் தெலுங்கு இயக்குனர்களுடன் கைகோர்த்து ஆளுக்கொரு படத்தில் நடித்து விட்டனர். இதில் சிவகார்த்திகேயனைத் தவிர விஜய்க்கும் தனுஷுக்கும் அவர்களது தெலுங்கு என்ட்ரி ஓரளவு கை கொடுத்தது என்று சொல்லலாம்.
இந்த நிலையில் இவர்களை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் தெலுங்கு இயக்குனரான 'கார்த்திகேயா-2' புகழ் சந்து மொண்டேட்டி டைரக்சனில் ஒரு படத்தின் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை இயக்குனர் சந்து மொண்டேட்டி, சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படம் சோசியல் பேண்டஸி படமாக நான்கு வேதங்களை மையப்படுத்தி உருவாக இருக்கிறதாம்.
அதேசமயம் சூர்யா ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட படங்களை நடித்து முடித்து விட்டு வர இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால் அதன் பிறகு தான் தங்களின் படம் துவங்கும் என்றும் இயக்குனர் சந்து மொண்டேட்டி கூறியுள்ளார். அதேசமயம் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் தான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், சூர்யா அவ்வப்போது தன்னை தொடர்பு கொண்டு படத்தின் அப்டேட் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார் இயக்குனர் சந்து மொண்டேட்டி..




