கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் |
கடந்த 2014ம் ஆண்டில் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சுரபி, சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ' வேலையில்லா பட்டதாரி'. அனிரூத் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் இன்றும் இளைஞர்கள் மத்தியில் ஒலிக்கிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த காலக்கட்டத்தில் தெலுங்கில் 'ரகுவரன் பி.டெக்' எனும் பெயரில் வெளியாகி தனுஷுக்கு தெலுங்கு மார்கெட்டையும் உருவாக்கியது.
சமீபகாலமாக தமிழில் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்று வருகின்றன. இது தெலுங்கு சினிமாவிலும் எதிரொலிக்கிறது. சூர்யா நடித்து வெற்றி பெற்ற வாரணம் ஆயிரம் படத்தின் தெலுங்கு பதிப்பான சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் படம் கடந்தவாரம் தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து 7ஜி ரெயின்போ காலனி படமும் தெலுங்கில் ரீ-ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் 'ரகுவரன் பி. டெக்' தெலுங்கு பதிப்பை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வருகின்ற ஆகஸ்ட் 18ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். திரையரங்குகள் எண்ணிக்கை மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.