பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தெலுங்கு படமான ஜதிரத்னலு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பரியா அப்பதுல்லா. அந்த படம் வெற்றி பெற்றபோதும் பரியா அப்துல்லாவுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையில்லை. தற்போது 'தி ஜெங்காபுரு கர்ஸ்' என்கிற இந்தி வெப் தொடரில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் .சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கும் 'வள்ளி மயில்' படத்தின் மூலம் தமிழக்கு வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் பரியா அப்துல்லா தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது " எனது அக்கா சென்னையில் இருப்பதால் அடிக்கடி சென்னை வந்து நானும் தமிழ் கற்றுக் கொண்டேன். வள்ளி மயில் படப்பிடிப்பு தளத்திலும் தமிழ் கற்றேன். இப்போது தமிழ் பேசுவதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும், ஓரளவுக்கு பேசவும் முடியும்.
அடிப்படையில் நான் ஒரு நாடக நடிகை, ஆங்கில நாடகத்தில் நடித்திருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் இந்த படத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். இங்கு தெருக்கூத்து கலை பற்றி முறையாக பயிற்சி பெற்று நடிக்கிறேன். வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் பரியா அப்துல்லா.