குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‛ஜெயிலர்'. அவருடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, தமன்னா, ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்டோருடன் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ஆக., 10ல் திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலரை 'ஷோகேஸ்' என்ற புதிய பெயரில் வெளியிட்டனர்.
2:15 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் ரஜினி சற்று வயது முதிர்ந்த, டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற தோற்றத்தில் வருகிறார். பூனை போன்று சாந்தமாகவும், புலி போன்று ஆக் ஷனிலும் இரண்டு விதமாக ரஜினி அசத்தி உள்ளார். பூனை போன்று அமைதியாக இருக்கும் ரஜினியை பார்க்கும்போது இவரை போன்று சாந்தமான மனிதர் உண்டா என்கிற ரீதியில் அவர் உள்ளார். அதேசமயம் புலியாக மாறினால் ஆக்ஷனில் எந்தளவுக்கு எதிரிகளை கொல்லுவார் என்பதையும் இந்த டிரைலரில் காண முடிகிறது.
‛‛ஒரு அளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சு கிடையாது வீச்சு மட்டும் தான்.... ரொம்ப தூரம் போயிட்டேன் புல்லா முடிச்சுட்டு தான் திரும்ப வருவேன்...'' ஆகிய வசனங்கள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த டிரைலர் வெளியான அரைமணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று டிரெண்ட் ஆனது.