பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு |

சமீபத்தில் ஓடிடியில் வெளியான தமிழ் வெப் தொடர் 'ஸ்வீட் காரம் காபி'. பாட்டி லட்சுமி, அம்மா மதுபாலா ஆகியோருடன் பேத்தி சாந்தி பாலச்சந்திரன் சென்னையில் இருந்து கோவாவிற்கு காரில் தனியாக பயணம் செய்வது மாதிரியான கதை. மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படத்தின் மூலம் புகழ்பெற்ற சாந்தி பாலச்சந்திரன் அதன்பிறகு பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்த தொடரின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
தொடரில் நடித்திருப்பது பற்றி சாந்தி கூறும்போது "இந்த தொடர் பாட்டி, அம்மா, பேத்தி ஆகியோர் குடும்ப கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக ஒரு பயணம் மேற்கொள்வது மாதிரியான கதை. இதில் பாட்டியாக நடிக்க லட்சுமியையும், அம்மாவாக நடிக்க மதுபாலாவையும் தேர்வு செய்து விட்டார்கள். பேத்தியாக நடிக்க அவர்களின் முகசாயலில் உள்ள ஒருவரை தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலாவும், இயக்குநர் பிஜாய் நம்பியாரும் பலமொழிகளிலிருந்து என் வயதுடைய நடிகர்களைத் தேடி இருக்கிறார்கள். இறுதியாக, நான் பொருத்தமாக இருப்பேன் என்று முடிவு செய்து என்னை நடிக்க வைத்தார்கள். இதன் மூலம் தமிழுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.