சினிமா மோகத்தால் சீரழியும் பெண்கள்.... எங்கே செல்லும் இந்த பாதை! | குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் |
பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இதில் வடிவேலு, கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் 'சந்திரமுகி 2' படத்தில் உள்ள முக்கிய வேடமான 'வேட்டையன் ராஜா கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் நாளை ஜூலை 31ம் தேதி காலை 11 மணி நேரத்தில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். மேலும், ரஜினி நடித்த வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் எப்படி இருப்பார் என ரசிகர்கள் காண ஆர்வமாக உள்ளனர்.