என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

பலாஷா பட இயக்குனர் கருண குமார் இயக்கத்தில் நடிகர் வருண் தேஜ் தனது 14வது படமாக மட்கா என்கிற படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகை நோரா பதேகி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இவர்களுடன் நவின் சந்திரா, கன்னடா கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் ரவி தேஜா, பன்ஞ்ச வைஸ்னவ் தேவ், நிதின், துல்கர் சல்மான் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1960ம் காலகட்டத்தில் பீரியட் படமாக உருவாகும் இந்த படத்தை வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தெலுங்கு, தமிழ்,ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் என இன்று இந்த படத்தை பூஜை உடன் அறிவித்துள்ளனர்.