நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகாத்திகேயன் நடித்து வரும் படம் 'அயலான்'. ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வேற்று கிரக வாசி கதை என்பதால் இப்படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன. அதற்கான வேலைகள் கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது.
படத்தில் சில முக்கிய காட்சிகளின் விஎப்எக்ஸ் வேலைகளுக்காக சென்னையில் மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அதில் நடிகர்கள் யாரும் பங்கு பெறவில்லையாம். சென்னையில் சில பிரபலமான இடங்களைத் தனியாகப் படமாக்கியுள்ளார்கள். அவற்றை வைத்து விஎப்எக்ஸ் காட்சிகள் சிலவற்றை உருவாக்க வேண்டியுள்ளதாம். 'அயலான்' படத்திற்காக உருவாகி வரும் விஎப்எக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' கடந்த வாரம் வெளியானது. அவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். காஷ்மீரில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'மாவீரன்' பட வெளியீட்டிற்காகக் கடந்த வாரம் படப்பிடிப்பிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் மீண்டும் அப்படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.