''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரீல்ஸ்கள் மூலம் வைரலாகி 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கை ரோலில் நடித்துள்ளவர் மோனிஷா பிளஸ்ஸி. இறுக்கமான முகங்களையும் புன்னகை பூக்க செய்யும் இவரது நடிப்பாற்றல் பலரது பாராட்டை பெற்றுள்ளது. நகைச்சுவை, பொலிவு ஆற்றலோடு எதையும் எதிர்கொள்ளும் இவர் நம் தினமலர் வாசகர்களுக்காக கூறியதாவது....
உங்களை பற்றி
பிறந்து வளர்ந்தது சென்னை. அப்பா கேரளா, அம்மா தமிழகம். எம்.எஸ்சி., மீடியா எலக்ட்ரானிக்ஸ் படித்தேன். நடிப்பில் ஆர்வம் உண்டு. மேடைகளில் திறமையை வெளிப்படுத்த ஆசைபட்டேன்.
ரீல்ஸ் டூ தொலைக்காட்சி வந்தது
பிளஸ் 1 படிக்கும் போது தனியார் டிவி நிகழ்ச்சியில் ஒரு நாள் தொகுப்பாளராக இருந்தேன். பிளஸ் டூ முடித்த பின் பகுதி நேரமாக நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். நடிகர் மதுரை முத்து ஊக்கமளித்தார். அப்போது தான் நடிப்பு ஆர்வத்தில் ரீல்ஸ் செய்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறும்படங்களிலும் நடித்தேன்.
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தது
'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் பங்கேற்றேன். கோவை சரளா வேடத்தில் நான் நடித்த 'ஷோ' மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் தான் எனது பெயர் மோனிஷா என்பது பலருக்கு தெரிய துவங்கியது. பொது இடங்களில் அடையாளம் கண்டு என்னை மக்கள் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் மாடர்ன் லவ் திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
சிவகார்த்திகேயன், சரிதா ஆகியோருடன் நடித்த அனுபவம்
சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி, சினிமாவில் கடின உழைப்பை கொடுத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். நமக்கான வாய்ப்பு அங்கேயே தான் இருக்கும். நம் கடின உழைப்பை மட்டும் தொடர்ந்து செய்ய வேண்டும். 'லிவ் தி மொமென்ட்' என்ற நிகழ் தருணத்தில் இருக்கும் அறிவுரையை எனக்கு கூறினார். சரிதா கண்ணிலே நளினங்களை காட்டுபவர். அவருடைய அனுபவங்கள் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.
மாவீரனில் உங்கள் கதாபாத்திரம்
சிவகார்த்திகேயனின் தங்கை ரோலில் நடித்துள்ளேன். மண்டேலா திரைப்படத்தில் யோகி பாபுவுடன் ஆகாஷ் கதாபாத்திரம் பயணிப்பது போல் நானும் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துடன் பயணிப்பேன்.
பெற்றோரின் ஆதரவு
என் அப்பா பிஜூ, அம்மா ரதிதேவி. இருவரின் ஆதரவு இல்லை எனில் நான் சினிமாவுக்கு முயற்சி செய்திருப்பேனா என தெரியாது. இருவருமே என்னுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்தனர். நல்ல நண்பர்கள் போல உள்ளனர்.
நடிப்புத்துறையில் சாதிக்க விரும்புவோருக்கு கூற விரும்புவது
நிறைய ஆடிஷன்களில் நன்றாக செய்தும் ஏன் கிடைக்கவில்லை என தோன்றும். சில நேரம் தேர்வானாலும், வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டேன். ஆனால் இப்போது பார்க்கும் போது அந்த நிராகரிப்புகள் எல்லாம் நாம் இந்த இடத்திற்கு வருவதற்காக தயார்படுத்தி உள்ளது என்பது புரிகிறது. கிடைக்கும் எந்த வாய்ப்புகளையும் விடாதீர்கள். மீடியா என்பது ஒரு வட்டம். எங்கு பணிபுரிந்தாலும் அதன் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும். எல்லாவற்றையும் அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். அது நம்மை செதுக்கி கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து கடின உழைப்பு நுாறு சதவீதம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.