ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

'கேஜிஎப்' கன்னடப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அவருடைய அடுத்த படமான 'சலார்' படம் தெலுங்குப் படமாக எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தில் தெலுங்கு காமெடி நடிகரான சப்தகிரி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். படத்திற்கான டப்பிங் பணியை முடித்துவிட்டு டுவிட்டரில், “அதிகம் எதிர்பார்க்கப்படும் 'சலார்' படத்தில் எனது கதாபாத்திரத்திற்கான டப்பிங்கை இன்று முடித்துள்ளேன். இப்படம் பிளாக் பஸ்டர் படமாக அமையும். பாக்ஸ் ஆபீசில் இப்படம் 2000 கோடி வசூலைக் கடக்கும் என உறுதியாக இருக்கிறேன். பான் வேர்ல்டு நடிகரான எங்களது பிரபாஸ், இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோருக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சப்தகிரியின் இந்த டுவீட்டிற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் அதை ரிடுவீட் செய்துள்ளனர்.




