டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
1978ம் ஆண்டில் கே.பாலசந்தர் இயக்கிய அவள் அப்படித்தான் என்ற படத்தில் அறிமுகமானவர் சரிதா. அதன்பிறகு தப்பு தாளங்கள், நூல் வேலி, பொண்ணு ஊருக்கு புதுசு, வண்டி சக்கரம் என ஏராளமான படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் டப்பிங் குரல் கொடுப்பதில் கவனத்தை திருப்பிய சரிதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சரிதா அளித்த ஒரு பேட்டியில், அடுத்தடுத்து சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை பார்த்தேன். மிகச் சிறப்பாக அந்த படத்தை அவர் இருக்கி இருந்தார். அதையடுத்து அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அதோடு உங்களது இயக்கத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசையாக உள்ளது என்றும் தெரிவித்தேன். அப்போது அவர் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறியதோடு, என்னுடைய அம்மாவிற்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அவர் உங்களது ரசிகை என்று கூறினார் என அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகை சரிதா.