சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ்த் திரையுலகில் 80களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சரிதா. அந்த கால கட்டத்திலேயே மற்ற நடிகைகளைப் போல அல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இந்தக் கால ரசிகர்கள் இவர் யார் என்று கேட்டால், 'பிரண்ட்ஸ்' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் தெரிந்துவிடும்.
கடந்த 35 வருடங்களில் தமிழில் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். கடைசியாக 2006ல் வெளிவந்த 'ஜுன் ஆர்' படத்தில் நடித்தார். 2013ல் வெளிவந்த 'சிலோன்' என்ற படத்திலும் நடித்திருந்தார். திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட அந்தப் படம் இங்கு தியேட்டர்களில் வந்து போன சுவடு தெரியாமல் போனது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'மாவீரன்' படததில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சரிதா. இது பற்றிய அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகி உள்ளது.