ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? | பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் |
லிங்குசாமி இயக்கிய 'தி வாரியர்' படத்தில் நடித்த ராம் பொத்தனேனி அடுத்ததாக போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் தற்போது படத்தின் தலைப்பு 'ஸ்கந்தா' என்று அறிவிக்கப்ட்டுள்ளது. ஸ்கந்தா என்பது முருகபெருமானின் இன்னொரு பெயர். அதோடு படம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளளது.
இந்தப் படத்தில் ராமுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ராம் பொத்தனேனி இது தவிர 'டபுள் ஸ்மார்ட்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.