''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இந்தியத் திரையுலகில் முதன் முதலில் இசைக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றவர் ஏஆர் ரஹ்மான். 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான் கடந்த 30 வருடங்களில் தமிழிலேயே 100க்கும் குறைவான படங்களுக்குத்தான் இசையமைத்துள்ளார்.
பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள், பிரபலமான இயக்குனர்கள் அல்லது பிரபலமான ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பதை பின்பற்றி வந்தார். அவரது ஆரம்ப காலங்களில் மட்டும் 'ஜென்டில் மேன், உழவன், வண்டிச்சோலை சின்ராசு, பவித்ரா, புதிய மன்னர்கள்” என சில சிறிய படங்களுக்கு இசையமைத்தார். இரண்டாம் கட்ட ஹீரோக்களின் படங்களிலோ, புதிய இயக்குனர்களின் படங்களிலோ அவர் அதிகமாகப் பணி புரிந்ததில்லை. அவர் இசையமைத்த படங்களைப் பற்றிப் பார்த்தாலே அது தெரிய வரும்.
அறிமுக இயக்குனர்களின் படங்களில், சிறிய நடிகர்களின் படங்களில் அவர் அதிகமாக இருந்ததேதில்லை. பலருக்கும் அவர் இசையமைக்க படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், ஏனோ அப்படி ஒன்று நடக்கவேயில்லை. இருந்தாலும் இடையிடையே, “இரவின் நிழல், காவியத் தலைவன், மரியான், சக்கரக்கட்டி, அன்பே ஆருயிரே, நியூ, எனக்கு 20 உனக்கு 18, பரசுராம், காதல் வைரஸ், அல்லி அர்ஜுனா, ஸ்டார், ரிதம், ஜோடி, சங்கமம், காதலர் தினம்' என் சுவாசக்காற்றே”, என சில படங்களுக்கு ஒரு சில வேண்டுகோளால், காரணங்களால் இசையமைத்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த 'மாமன்னன்' படத்திற்குக் கூட “இது தன்னுடைய கடைசி படம், அதனால் நீங்கள் இசையமைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டேன் என பல பேட்டிகளில் உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இப்போது அந்தப் படத்திற்கு இசையமைத்தது பற்றி பெருமையாக சொல்லி வருகிறார் ஏஆர் ரஹ்மான்.
இன்று பூஜை போடப்பட்ட ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' படத்திற்கும் இசையமைக்கிறார் ஏஆர் ரஹ்மான். இதற்கு முன்பு ஜெயம் ரவி தனி கதாநாயகனாக நடித்த எந்த ஒரு படத்திற்கும் அவர் இசையமைத்ததில்லை. ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையாச்சே என நீங்கள் கேட்கலாம். அது மணிரத்னத்திற்காக செய்த படம் என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்.
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் தனி கதாநாயகனாக நடிக்கும் 'ஜீனி' படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது ஆச்சரியமான ஒன்றுதான். அவருடைய இசையில் ஜெயம் ரவி நடிப்பதற்கு 20 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
ஜெயம் ரவி போலவே ஏஆர் ரஹ்மான் இசையில் இதுவரையில் நடிக்காத சில முன்னணி ஹீரோக்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆசைகளையும் ஏஆர் ரஹ்மான் ஒவ்வொன்றாக தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கலாமா ?.