ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. ரஜினிகாந்த் இப்போதும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு அவரை விட பல வயது குறைந்த நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் உயரத்தைத் தொட மற்ற நடிகர்கள் முயன்று வருகிறார்கள்.
அவர்களில் விஜய், அஜித் ஆகிய இருவருக்குத்தான் போட்டி அதிகமாக இருந்தது. அஜித் தனக்கென எந்த பட்டங்களையும் தற்போது வைத்துக் கொள்ளாத நிலையில் அவர் அந்த அடுத்த 'சூப்பர் ஸ்டார்' போட்டியில் அதிகம் பேசப்படாமல் இருந்தார். ஆனால், விஜய் நடித்து இந்த வருடம் வந்த 'வாரிசு' பட வெளியீட்டின் போதும் இந்த 'சூப்பர் ஸ்டார்' சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய படத்தில் நடித்துள்ள சீனியர் நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் சிவகார்த்திகேயனை ரஜினிகாந்த்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளனர். ஆனால், தன்னை அவருடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என சிவகார்த்திகேயன் பதிலளித்துப் பேசியுள்ளார். 'மாவீரன்' என ரஜினிகாந்த் படத்தின் பெயரை தனது படத்திற்குப் பயன்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.
இருந்தாலும் நேற்றைய விழாவை நடத்திய விதமும், சிவகார்த்திகேயன் மேடையில் ஏறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விதத்தையும் பார்த்த ரசிகர்கள் அவர் விஜய்யைப் போல செய்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் நடித்து படங்களின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எப்படி நடந்து கொண்டாரோ அதையே சிவகார்த்திகேயனும் பாலோ செய்கிறார் என்கிறார்கள்.
விஜய் அரசியலை நோக்கி தன்னுடைய பாதையைத் திருப்பியுள்ள இந்த நேரத்தில் ரஜினிகாந்த்தின் பாதையில் பயணிக்க சிவகார்த்திகேயன் ஆசைப்படுகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.