ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியவர் ரவீணா ரவி. தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான 'லவ் டுடே' படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மணப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் வெளியான 'மாமன்னன்' படத்தில் படத்தின் வில்லனான பகத் பாசில் மனைவியாக நடித்துள்ளார். படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இருக்கும் சிறிய கதாபாத்திரம். ஆனால், 'டப்பிங்' உலகில் கதாநாயகியான அவருக்கே படத்தில் ஒரு வசனம் கூட வைக்கவில்லை. படத்தில் அவருடைய குரலைக் கேட்கவே முடியாது. இது பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலர் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ரவீணா ரவி, “இந்தப் படத்தில் நான் பகத் பாசிலின் ஜோடியாக நடித்துள்ளேன். குறைவான நேரம்தான் திரையில்… வசனங்களும் கிடையாது, இருந்தாலும் நட்சத்திர நடிகர்களுடன் நடித்தது எனக்கு ஆசீர்வாதம், திறமையான குழுவினர், ஏஆர் ரகுமான் இசை,” என இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோரையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.