சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் நடிகர் அகில் அக்கினேனி. இவர் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஏஜென்ட் . பெரிய பொருட்செலவில் உருவான இப்படம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை தந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் அகில். புதுமுக இயக்குனர் அனில் குமார் இயக்கும் இந்த படத்திற்கு 'தீரா' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.