திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த 2010ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வெளிவந்த திரைப்படம் களவாணி. ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிராளி பிலிம்ஸ் தயாரித்து வெளிவந்த காலகட்டத்தில் விமர்சனம் ரீதியாகவும், மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று வரை விமலை ரசிகர்கள் மறக்காமல் ஞாபகம் வைத்திருக்க காரணம் களவாணி படம் தான் என்றால் மிகையாகாது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி நேற்றோடு 13 வருடத்தை நிறைவு பெற்றதை முன்னிட்டு விமல் தனது டுவிட்டரில் மகிழ்ச்சியோடு இப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளார் இதற்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.