'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
கன்னடத்தில் கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றி படங்களாக மாற்றி முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்க உள்ளார். இதற்கிடையே தெலுங்கில் உருவாகும் ஒரு படத்திற்கு கதை மட்டும் எழுத இருக்கிறார் பிரசாந்த் நீல்.
சலார் படத்தை தெலுங்கில் தயாரித்து வரும் கேஜிஎப் பட தயாரிப்பாளரான விஜய் கிரஹந்தூர், தெலுங்கில் இன்னொரு படத்தையும் தயாரிக்கிறார். கவி ரெட்டி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகனாக அவருடைய உறவினர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா என்பவர் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தான் இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுதுகிறார். தன்னை கேஜிஎப் படம் மூலம் கைதூக்கி விட்ட தயாரிப்பாளருக்கு நன்றி கடனாக இதை செய்கிறார் பிரசாந்த் நீல்.