பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

கடந்த 2005ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த திரைப்படம் அந்நியன். சதா, விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பொருட்செலவில் உருவான இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் வரவேற்பையும், வசூலையும் பெற்றது.
இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்காக டிஜிட்டலில் இந்த படத்தை ரீ-மாஸ்டர் செய்துள்ளனர். விரைவில் இந்த படத்தை தமிழகமெங்கும் ரீ ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். சமீபத்தில் ரஜினியின் பாபா, தனிக்காட்டு ராஜா, கமலின் வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் வெளியாகின. அந்த வரிசையில் அடுத்து அந்நியன் வெளிவர உள்ளது.