அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தெலுங்கு முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யாவின் சமீபத்திய படங்கள் தோல்வி அடைந்து வருகிறது. அவர் சமந்தாவை பிரிந்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். கடைசியாக நடித்த தேங்க் யூ, கஸ்டடி படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதில் 'கஸ்டடி' படம் மூலம் மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழுக்கு வந்தார். அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது.
தற்போது 'கார்த்திகேயா' படங்களை இயக்கிய சந்து மொண்டேட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவர் நீக்கப்பட்டு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
“நாக சைதன்யா படத்தில் நடிக்க தொடக்கநிலை பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடந்தது, ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை” என்று அனுபமா தரப்பு கூறுகிறது.