மே மாதத்தை குறி வைக்கும் ‛ஏழு கடல் ஏழு மலை' | ஜி.வி.பிரகாஷை இயக்கும் 'ஜோ' இயக்குநர் | சின்னத்திரை பிரபலங்கள் உருவாக்கும் 'தமிழினி' | ரவி மோகனின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் நாயகனாக நடிக்கும் பிரேம்ஜி | 'டிராகன்' படத்திற்காக உடலை மெருகேற்றிய ஜூனியர் என்டிஆர் | பிளாஷ்பேக் : தமிழில் ஐந்து படங்களில் மட்டுமே நடித்த மாலாஸ்ரீ | பிளாஷ்பேக்: ஆக்சன் ஹீரோவாக நடித்த கே. பாலாஜி | 20 அடி ஆழத்தில் ஆடையின்றி நடித்த ஆர்யா | பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்” |

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக், நள்ளிரவு வெளியானது. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக, ‛நா ரெடி' பாடலும் இன்று வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
லோகேஷின் வழக்கமான அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது. இன்று(ஜூன் 22) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே நா ரெடி என்ற பாடல் வெளியாவதாக அறிவித்துள்ளனர். இதன் முன்னோட்டமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர். அந்த நான்கு வரி பாடலிலேயே விஜய்யின் அரசியல் ஆசை பற்றிய வெளிப்பாடு தெரிகிறது.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.




