படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் என்றுதான் இப்படத்தைப் பற்றி அனைவரும் பேசினார்கள், எழுதினார்கள். ஆனால், படத்தைப் பார்த்த பின் சில பல சர்ச்சை எழுந்ததால் இது குறித்து படத்தின் எழுத்தாளர் மனோஜ் முன்தஷிர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
“படத்தின் பெயர் 'ஆதிபுருஷ்'. நான் முன்பும் சொன்னேன், இப்போது மீண்டும் சொல்கிறேன், நாங்கள் ராமாயணத்தை எடுக்கவில்லை. இதைப் படமாக்க அது எங்களைத் தூண்டியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் 'பொறுப்பு துறப்பு' என்று இதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளோம். இப்படத்திற்கு 'ஆதிபுருஷ்' என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக 'ராமாயண்' எனப் பெயர் வைத்திருந்தால் எங்களுக்கு மார்க்கெட்டிங் செய்வதற்கும் சுலபமாக இருந்திருக்கும். ராமாயணத்தின் 'யுத்த காண்டம்' பகுதியை மட்டும் படத்தில் சித்தரித்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மனோஜின் இந்த பேட்டியும், கருத்தும் மீண்டும் ஒரு வாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.