விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
கே.கே.,நகர் சென்னை, மதுரவாயல், தனலட்சுமி ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 29. இவர், நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா சைன்' ரக இருசக்கர வாகனத்தில், வடபழநி - ஆற்காடு சாலையில் சென்றார். செந்தில் ஏஜன்சி அருகே சென்ற போது, சாலிகிராமம், எம்.சி., அவென்யூவைச் சேர்ந்த சினிமா துணை நடிகர் பழனியப்பன், 41, தன் நண்பர் துரைராஜ் என்பவருடன், காரில் அதே பகுதியில் வந்துள்ளார்.
அப்போது, பழனியப்பன் குடி போதையில் ஓட்டி வந்த கார், சரண்ராஜின் இரு சக்கர வாகனத்தின் பின்னால், பயங்கரமாக மோதியுள்ளது. இதில் துாக்கி வீசப்பட்ட சரண்ராஜ், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலின்படி, கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து, சரண்ராஜ் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழனியப்பன் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.
சரண்ராஜூம் துணை நடிகராக உள்ளார். இவரும் பழனியப்பனும் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. இது விபத்தா அல்லது கொலையா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.