'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஏகே புரொடக்ஷன்ஸ் ஆர்.ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிம்பிளிக்கி பிலாப்பி'. வெங்காராஜ், ராஜேந்திரன், நர்மதா, ஆன் சாமுவேல் ஆகியோர் நடித்துள்ளனர். ஆண்டனி வில்லனாக நடித்துள்ளார். தியரி, கிருஷ்ணகாந்த், ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆண்டனி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கிறார். ஜோகன் சிவனேஷ் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஆண்டனி கூறியதாவது: ஹாரர் - டார்க் காமெடி படமாக உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 2,000 கோடி வரை பரிசாக வெல்லக் கூடிய லாட்டரி முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி சீட்டை தேடி செல்லும் கும்பல் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறது. அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதே படத்தின் மையக்கதை. கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்ட 'பிம்பிளிக்கி பிலாப்பி' டீசரை பார்த்த உலகெங்கிலும் இருந்து வந்திருந்த இயக்குநர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் வெகுவாக பாராட்டினர். பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள அழகான பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.