ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்திற்காக தனது உடல் எடையை பெரிய அளவில் குறைத்து நடித்தார் சிம்பு. அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதையடுத்து மீண்டும் அவரது மார்க்கெட் எகிற துவங்கியது. அதன் பிறகு வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்தவர், தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தில் போர் வீரராக நடிக்கும் சிம்பு அதற்கு தேவையான சில பயிற்சிகளை பெறுவதற்காக தற்போது லண்டனில் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில் செம ஸ்டைலிசான கெட்டப்பில் லண்டன் சாலைகளில் தான் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிம்பு. அந்த புகைப்படத்தை அவர்கள் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும், லண்டனில் பயிற்சி பெற்று விட்டு சிம்பு சென்னை திரும்பியதும் அவரது புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.