பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கடந்த 2017ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம். அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் தற்போது லியோ என பிரமாண்ட படங்களாக அவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவரது முதல் படமான மாநகரம் ஹிந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி உள்ள இந்த படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் ஹிந்தியில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இது ஹிந்தியில் அவர் நடித்து வெளியாகும் முதல் படமாகும்.
ஆனால் கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இந்த படம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் இரண்டாம் தேதி இந்த மும்பை கார் படம் ஜியோ சினிமா என்ற ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி ஹிந்தியில் நடித்த முதல் வெப் தொடரான பர்சி ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் தற்போது விஜய் சேதுபதி ஹிந்தியில் நடித்துள்ள முதல் திரைப்படமும் ஓடிடி தளத்தில்தான் வெளியாகப் போகிறது.




