நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஐதராபாத் : உடல்நலம் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு(71) இன்று(மே 22) காலமானார்.
தென்னிந்திய சினிமாவில் ஹீரோவாக, குணச்சித்ர நடிகராக ஏராளமான படங்களில் நடித்தவர் சரத்பாபு (71). 1977ம் ஆண்டு 'பட்டினப்பிரவேசம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மெட்டி, முள்ளும் மலரும், உதிரிபூக்கள், சட்டம், சங்கர் குரு வேலைக்காரன், முத்து, அண்ணாமலை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் என 200 திரைப்படங்களிலும், 'டிவி' தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்பு நோய் அழற்சி பிரச்னை காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று(மே 22) சிகிச்சை பலன் இன்றி அவர் மறைந்தார்.
சரத்பாபுவின் மறைவு தென்னிந்திய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சரத்பாபுவின் உடல் ஐதராபாத்தில் பிலிம்சேம்பரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு மேல் சென்னை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். நாளை(மே 23) சென்னையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.