துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கிறார் விஜய். இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 20 ஆண்டுகளுக்கு பின் விஜய்யின் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்.
இந்தப்படம் எந்தமாதிரியான கதையில் உருவாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஒரு முழு நீள அரசியல் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்தவுடன் அடுத்த 6 மாதங்கள் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்குகிறார் என்கிறார்கள். சமீபகாலமாக விஜய் அரசியல் தொடர்பான விஷயங்களில் தீவிரம் காட்டுகிறார். முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் அவர்களது சிலைக்கு மாவட்டம் தோறும் அவரது மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அடுத்தாண்டு பார்லிமென்ட் தேர்தல் வருவதால் அதை நகர்த்தி விஜய் அரசியல் பணிகளில் இறங்குகிறார் என கூறப்படுகிறது.