பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை |
ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த் அதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மீண்டும் லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது 170வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. இப்படத்தை சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் ரஜினி 170வது படத்தின் கதை குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக நடிப்பதாகவும், போலி என்கவுண்டர் கதையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் தான் இயக்கிய ஜெய்பீம் படத்தை போலவே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இயக்குகிறார் ஞானவேல்.