அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா | தெலுங்கில் அறிமுகமாகும் இந்திய அழகி | அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்: விஜய்சேதுபதி | பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம் | பிளாஷ்பேக்: 'தெனாலிராமன்' சிவாஜியை கிண்டல் செய்த கண்ணதாசன் | 'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி | சின்ன படங்களுக்கு எட்டாக்கனியாகிறதா அனிருத் இசை? | இளவரசியாக நடிக்கும் ரக் ஷனா | பொங்கல் போட்டி : தியேட்டர்கள் கிடைக்கத் தடுமாறும் தெலுங்குப் படங்கள் | 'ஜனநாயகன்' டிரைலரை பின்னுக்குத் தள்ளிய 'பராசக்தி' டிரைலர், எழுந்த சர்ச்சை |

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி மேனன், பசுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய மாளவிகா மோகனன், தங்கலான் படத்தில் விக்ரமுடன் நடித்து வரும் அனுபவம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், இந்த தங்கலான் படத்தை பொருத்தவரை விக்ரம் இல்லாமல் இந்த பயணத்தை என்னால் நினைத்து பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் எனக்கு உதவியாக இருந்துள்ளார். தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றி இருக்கும் அனைவருமே நன்றாக நடிக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவர். அதோடு தன்னுடன் நடிப்பவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி எப்போதும் கலகலப்பாக காமெடியாக பேசிக் கொண்டிருப்பார் விக்ரம் என்று கூறி இருக்கும் மாளவிகா மோகனன், விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது தங்கலான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் பூரண குணமடைந்ததும் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.