என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், அதன் பிறகு விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது பல படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பர்ஹானா என்ற படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த ஒரு பேட்டியில், புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த ஸ்ரீ வள்ளி கேரக்டரில் நான் நடித்திருந்தால் அவரைவிட சிறப்பாக நடித்திருப்பேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது தான் அப்படி சொல்லவே இல்லை என அது குறித்து ஒரு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த அறிக்கையில், சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது தெலுங்கு சினிமாவில் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று என்னிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, எனக்கு தெலுங்கு சினிமா ரொம்ப பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன். உதாரணத்துக்கு புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தான் பதில் கொடுத்திருந்தேன். என்றாலும் துரதிஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அவரை விட நான் நடித்திருந்தால் சிறப்பாக நடித்து இருப்பேன் என்று நான் கூறியது போல் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
ஆனால் நான் அந்த அர்த்தத்தில் அதற்கான பதிலை சொல்லவில்லை என்று கூறி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகாவின் கடின உழைப்பை ஒருபோதும் நான் குறை கூறவில்லை. அதனால் அந்த குழப்பத்தை போக்குவதற்காகவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மீதும், அவரது நடிப்பின் மீதும் எனக்கு பெரிய அளவில் மரியாதை உண்டு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் . அதனால் மீடியாக்கள் தொடர்ந்து நான் சொன்ன பதிலை தவறான கோணத்தில் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.