கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால். தற்போது ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் மோகன் தாஸ். இந்த படத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்போது இந்த படத்தை ஜியோ சினிமாஸ் நிறுவனம் நேரடியாக ஓடிடியில் வெளியிட மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளனராம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஜியோ சினிமாஸ் நிறைய சிறு பட்ஜெட் படங்களை வாங்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது .