இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
கலைத்துறையில் பாராட்டுகள் பல அடைந்தாலும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் எனது அன்னையை சேரும் என்கிறார் வளர்ந்து வரும் நடிகர் விஷ்வந்தி அவர் அளித்த பேட்டி
உங்கள் குடும்பம் பற்றி..
எனது சொந்த ஊர் திருநெல்வேலி, அப்பா நடராஜன் அஞ்சல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அம்மா குடும்பதலைவி இசைமணி 67. இரண்டு சகோதரிகன். அப்பா, அம்மா என்னுடன் உள்ளனர்,
நடிக்க வந்தது எப்படி
இன்று சினிமா நடிகராக எனது அம்மாதான் காரணம். அப்பா வெளியூரில் பணி புரிந்ததால் மாதத்தில் 2 நாட்கள் தான் வருவார், அம்மா தான் எங்களை கவனித்தார். நான் முதலாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் சுதந்திர இன கலைநிகழ்ச்சிக்காக டைரியில் எழுதியதை கவனிக்கவில்லை. பள்ளிக்கு சென்றபோது தான் தெரிந்தது. அப்போது அம்மா அருகேயுள்ள வீடுகளில் வேட்டி, சட்டை வாங்கி எனக்கு பாரதியார் வேடமிட்டு கவிதைகள் கூறினேன். அதற்கு பரிசு கிடைத்தது. அதுதான் காரணமாக அமைந்தது.
அம்மா சமையலில் பிடித்தது
பெரிய ஓட்டல்களில் சாப்பிட்டாலும் அம்மா கையால் செய்யும் வத்தல், புளி குழம்பிற்கு ஈடு ஆகாது, ஒருமுறை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நள்ளிரவு வந்தேன். சாப்பிடவில்லை எனர் கூறினேன். நான் ரெஸ்ட் ரூம் சென்று வருவதற்குள் எனக்கு பிடித்த பருப்பு குழம்பு. வெண்டைக்காய் கூட்டு தயார் செய்து கொடுத்தாங்க, இந்த கவனிப்பு அம்மாவை தவிர யாரிடமும் கிடைக்காது.
அம்மாவிடம் அடிவாங்கியது உண்டா
இல்லை. என்னை ராஜு என அம்மாவின் அப்பா பெயரான ராஜகோபால் என்பதை சுருக்கி அழைப்பார், எனது நிஜப்பெயர் பொன்னம்பலவாணன், சினிமா விற்காக தான் விஷ்வந்த் என மாற்றியுள்ளேன்.
சூட்டிங் பார்க்க அழைத்து செல்வீர்களா
படப்பிடிப்பின் கடைசி நாளில் அம்மா, அப்பாவை அழைத்து சென்றுள்ளேன். இதற்காக இயக்குனர்களிடம் முன் கூட்டியே அனுமதி வாங்கிவிடுவேன். இதுவரை கபாலி, அட்டகத்தி, அண்ணாத்த, சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்துள்ளேன். தொடர்ந்து எட்டு படங்களில் நடித்து வருகிறேன். கல்லூரியில் படிக்கும் போது நாக் கமிட்டி முன்பு கலைநிகழ்ச்சி நடத்த கூறினர். இதனை மற்றவர்கள் பார்க்க அனுமதி கிடையாது. சிறப்பு அனுமதி கேட்டு அம்மாவை அழைத்து வந்தேன.
காலையில் கண்விழித்ததும் நான் கைதொழும் தேவதை 'அம்மா' என்ற பாடல், பிச்சைக்காரன் வேடத்தை பார்த்து அம்மா கண்ணீர் விட்டார். இதுவரை அம்மா என்னிடம் இது வேணும், அது வேணும் என்று கேட்டது இல்லை. அது 'தாங்க அம்மா...