லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண் தற்போது உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். இப்படம் தமிழில் விஜய் நடித்து வெளிவந்த தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது அதற்காக படக் குழுவினர்கள் புது போஸ்டர்கள் வெளியிட்டனர் அதில் தான் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் நடிகை பூனம் கவுர் போஸ்டர் குறித்து கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார் . பவன் கல்யாணின் கால்களைக் காட்டும் போஸ்டர் ஒன்று வெளியானது அதற்கு பூனம் கவுர், பவன் கல்யாண் காலடியில் உஸ்தாத் பகத் சிங் பெயர் உள்ளது. இது சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கை அவமதிக்கும் செயல் என்று பூனம் டுவீட் செய்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛புரட்சியாளர்களை உங்களால் மதிக்க முடியாத போது அவர்களை அவமதிக்காதீர்கள். சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் போஸ்டர் பகத்சிங் பெயரை காலுக்கு கீழே வைத்து அவமானப்படுத்துகிறது. இதை எப்படி சொல்வது ஈகோவா அல்லது அறியாமையா'' என பதிவிட்டார்.
இந்நிலையில் அடுத்து வெளியான இந்த படத்தின் மற்றொரு போஸ்டரில் படத்தின் டைட்டிலை மேலே குறிப்பிட்டு திருத்தி வெளியிட்டனர்.