மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் ராமாயணக் காவியத் திரைப்படமான 'ஆதி புருஷ்' படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
24 மணி நேரத்தில் இந்த டிரைலர் ஐந்து மொழிகளிலும் சேர்த்து 70 மில்லியன் பார்வைகளை, அதாவது 7 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்திலும், உலக அளவில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையையும் புரிந்துள்ளது.
ஐந்தே நிமிடங்களில் ஒரு லட்சம் லைக்குகளைப் பெற்ற ஹிந்தி டிரைலர், 9 நிமிடங்களில் 1 லட்சம் லைக்குகளைப் பெற்ற தெலுங்கு டிரைலர், 10 நிமிடங்களில் ஐந்து மொழிகளில் 10 லட்சம் பார்வைகள், 20 நிமிடங்களில் 20 லட்சம் பார்வைகள் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்துள்ளது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம்' தோல்விப் படங்களாக அமைந்த நிலையில் இந்த 'ஆதிபுருஷ்' பெரும் வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது என பாலிவுட் வட்டாரங்களிலும் பேச ஆரம்பித்துவிட்டார்களாம். அதற்கு டிரைலருக்கான வரவேற்பே சாட்சி என்று பிரபாஸ் ரசிகர்களும் மகிழ்கிறார்கள்.