சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழை விட தெலுங்கில் முன்னணியில் இருப்பவர் சமந்தா. தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் பெற்றுவிட்டார். இருப்பினும் சென்னையைச் சேர்ந்த சமந்தா ஹைதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார்.
அங்கு நடிகர்கள், நடிகைகள் அதிகம் வசிக்கும் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் ஏற்கெனவே சொந்தமாக ஒரு பிளாட் வீடு வைத்துள்ளார் சமந்தா. தற்போது ஹைதராபாத்தில் நனக்ராம்குடா என்ற இடத்தில் இரண்டாவதாக ஒரு பிளாட் வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள டூப்ளக்ஸ் பிளாட் வீட்டை வாங்கியுள்ளாராம். 13வது மற்றும் 14வது மாடியுடன் இணைந்த வீடு அது.
ஹைதராபாத்தின் புறநகர்ப்பகுதியான நனக்ராம்குடா ஐ.டி மற்றும் வருவாய் நிறைந்த பகுதியாக அறியப்படுகிறது. தன்னுடைய புதிய வீட்டிற்கான உட்புற அலங்கார வேலைகளை சமந்தா தற்போது செய்து வருகிறாராம். சமந்தா மும்பையில் கூட புது பிளாட் வீடு ஒன்றை வாங்கிவிட்டார் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளன.
சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சாகுந்தலம்' படம் பெரும் தோல்வியைத் தழுவியது. தெலுங்கில் 'குஷி' என்ற படத்தில் விஜய் தேவரகொன்டா ஜோடியாக நடித்து வருகிறார். 'சிட்டாடல்' வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.