'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை என்று புகார் செய்தார். இதை தொடர்ந்து வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் நகைகளை மீட்டனர் வழக்கு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா, தனது சொகுசு காரின் சாவியை காணவில்லை என்று தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், ஏப்ரல் 23ம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு பதிந்து போலீசார் கூறியதாவது : சொகுசு காருக்கு போலியான சாவி செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் மட்டும் மாற்று சாவியை பெற முடியும். அதற்கும் போலீசாரின் எப்.ஐ.ஆர். நகலை கார் நிறுவனத்திடம் சமர்ப்பித்தால் மட்டுமே சாவி கிடைக்கும். எனினும் சவுந்தர்யாவின் கார் சாவி தொலைந்ததா அல்லது திருடப்பட்டதா என விசாரிக்கிறோம் என்றனர்.