பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியிருந்தார். அந்த படம் திரைக்கு வந்தபோது பத்து தல இரண்டாம் பாகத்தை அடுத்து கிருஷ்ணா இயக்குவார் என்ற தகவல்களும் வெளியாகின. ஆனால் தற்போது பத்து தல படத்தின் இரண்டாம் பாகம் அல்லாமல் வேறு ஒரு படத்தை இயக்கும் பணிகளில் அவர் இறங்கி இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்து நான் இயக்கும் படத்தை ராமன் தேடிய சீதை, சாருலதா, ஹாய் சினாமிகா உள்பட பல படங்களை தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்திற்கான கதை விவாதங்கள் முடிந்து விட்ட நிலையில் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.
இப்படி கிருஷ்ணா தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து கிருஷ்ணாவின் அடுத்த படம் குறித்து வெளியான செய்தியை தனது ட்விட்டரில் பதிவிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும் பத்து தல படத்திற்கு ரஹ்மான் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கும் அவர்தான் இசையமைக்கிறாரா? இல்லையா? என்பது குறித்த தகவல் விரைவில் தெரியவரும்.




