சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

தமிழக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை பாலகிருஷ்ணன் தனது ரமணா பிலிம்ஸ் சார்பில் சிறிய பட்ஜெட்டில் எளிய முறையில் படமாக்கி இருந்தார். இந்த படத்தில் காமராஜராக ரிச்சர்ட் மதுரம் நடித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். அதன் பிறகு சமுத்திரகனி நடிப்பில் புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டும் இந்த படம் வெளிவந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை 'தி கிங் மேக்கர்' என்ற தலைப்பில் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். இதுகுறித்து டைரக்டர் பாலகிருஷ்ணன் கூறும்போது, “காமராஜர் சாதாரண தொண்டனாக வாழ்க்கையை தொடங்கி உலக தலைவராக மாறினார். தமிழக முதல் அமைச்சராக 9 ஆண்டுகள் சேவை புரிந்தார். உலகம் போற்றும் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார். காமராஜரின் வாழ்க்கையை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு நினைவூட்டுவது அவசியம். எனவே 'தி கிங் மேக்கர்' என்ற பெயரில் ஹிந்தி மொழியில் காமராஜ் படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 15-ந்தேதி வெளியாக இருக்கிறது. மும்பை, டில்லி, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். காமராஜ் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன'' என்றார்.




