ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா |
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சாந்தனு விஜய்யின் மாணவராக சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்தது தப்பான முடிவு என்று சாந்தனு கூறியுள்ளார். இது குறித்து அவர் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது:
'மாஸ்டர்' படத்திற்கு பிறகு எனது கேரியரே மாறும் ன்றார்கள், நானும் நம்பினேன். படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகள், என் கதாபத்திரம் மாறுவது, காதல் டிராக் என அனைத்து இருந்தது. கிட்டத்தட்ட 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தேன். எங்களுக்கு என்று தனி யூனிட் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.
ஆனால் என் உழைப்பு திரையில் வரவில்லை. விஜய் அண்ணாவும் எனக்குப் பிடிக்கும். அவர் படத்தில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரக்கூடிய அளவுக்கு நல்ல கதாபாத்திரம் என்றால் யார் விடுவார்கள்? அதனால்தான் ஒத்துக் கொண்டேன். ஆனால் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே படத்தில் என் காட்சி இடம்பெற்று இருந்தது. இதனால், பல கேலிகளுக்கு ஆளானேன். என்று கூறியிருந்தார். இந்த பேட்டி வீடியோ வைரலானது. விஜய் ரசிகர்கள் சாந்தனுவை சரமாரியாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்து சாந்தனு தனது டுவிட்டரில் "வருத்தப்பட்டது உண்மைதான். விமர்சனம் எதிர்கொண்டது உண்மைதான். ஆனால், அதற்காக நான் யாரையும் குறை சொல்லவில்லை. இந்த வீடியோவின் சிறுபகுதி மட்டும் பார்ப்பது நான் சொன்ன விஷயத்தை திசை திருப்பி விடும். எல்லா சரியான தேர்வுகளும் எதிர்பார்த்தபடி நல்ல முடிவுகளைத் தருவதில்லை. ஆனால், இதுவும் எனக்கு ஒரு கற்றல்தான், மறக்க முடியாத அனுபவம்தான்" என குறிப்பிட்டுள்ளார்.