பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? |

சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வரும் இயக்குனர் சுதா கொங்கரா, அடுத்தபடியாக ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி, இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை முடித்ததும் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் தங்கி உள்ளார் ரஜினிகாந்த். அங்கு அவரை கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர் உடன் நேரில் சென்று சந்தித்திருக்கிறார் இயக்குனர் சுதா. அப்போது கேஜிஎப் பட நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதற்கு அவர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக லால் சலாம் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி, அதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.